ரெயிலில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்

ரெயிலில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன

Update: 2022-03-21 19:59 GMT
திருச்சி
திருச்சி ஜங்ஷன் வரும் ரெயில்களில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் வகையில் தினமும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி, நேற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து திருச்சி வந்த பயணிகள் ரெயில் பெட்டியின் கழிவறை அருகில் யாராலும் உரிமை கோரப்படாத கருப்பு-வெள்ளைநிற பை ஒன்று கிடந்தது. அதனை எடுத்து சோதனை செய்தபோது அதில் வெளிநாட்டு மதுபாட்டில்கள் 26 இருந்தது. அந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த மதுபாட்டில்களை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்