குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் அவதி
தாயில்பட்டி பகுதியில் குரங்குகளில் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தாயில்பட்டி,
தாயில்பட்டி, கோட்டையூர், கலைஞர் காலனி, இந்திரா நகர், கட்டணஞ்செவல், அண்ணாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குரங்குகளின் தொல்லை அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கிறது. வீட்டிற்குள் இருக்கும் பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி பகுதியில் குரங்குகளில் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.