பணம் வைத்து சூதாடிய 3 பேர் சிக்கினர்
பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கம்மாபுரம்,
ஆலடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் விருத்தாசலம் அடுத்த கொக்காம்பாளையம் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதேஊரை சேர்ந்த சக்திவேல் (வயது 35), ஜெயராமன் (48), சீனிவாசன் (50) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து 150 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.