மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-21 19:29 GMT
சிதம்பரம், 

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு புவனகிரி தொகுதி செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். செயலாளர் குமார், பொருளாளர் முருகன், தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர், மாவட்ட இணை செயலாளர் சங்கமேஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாட்டுவண்டி தொழிலாளர்களுக்காக மணல் குவாரியை உடனடியாக திறக்க வேண்டும். கிளியனூர், ஆதிவராகநத்தம், கோ.ஆதனூர், கூடலையாத்தூர் ஆகிய பகுதியில் மாட்டுவண்டி மணல் குவாரியை விரைவில் அமைக்க வேண்டும், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளை உடனே விடுவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு.மாவட்டக்குழு ராஜமாணிக்கம் உள்பட மாட்டு வண்டி தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்