புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

கடலூர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை.

Update: 2022-03-21 19:21 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் யாருக்கும் பாதிப்பு இல்லை. இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை. இருப்பினும் இது வரை 74 ஆயிரத்து 246 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் வரை 73 ஆயிரத்து 341 பேர் குணமடைந்து சென்ற நிலையில், நேற்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இது வரை கொரோனாவுக்கு 895 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட 10 பேர் கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்