புகார் பெட்டி

புகார் பெட்டியில் மக்கள் அளித்த கோரிக்கை விவரம் வருமாறு

Update: 2022-03-21 18:56 GMT
தார் சாலை வேண்டும்
திருவாரூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளது. ஆனால் சாலை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு பயன்படாத வகையில் காட்சி அளிக்கிறது. குறிப்பாக சாலையில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்