கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா
கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவெண்காடு:
கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகநாதசாமி கோவில்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாதசாமி கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
கேது பகவான் 1½ ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சி அடைவது வழக்கம்.
கேது பெயர்ச்சி விழா
அதன்படி நேற்று கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதைத்ெதாடர்ந்து கேது பரிகார ஹோமம் நடந்தது.
பின்னர் கேது பகவானுக்கு வாசனை திரவியங்கள், மஞ்சள் பொடி, இளநீர், பால், தயிர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து பிற்பகல் 3.14 மணிக்கு கேது பகவான் பெயர்ச்சி அடைந்தவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பாதுகாப்பு பணி
இதில் கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியசாமி, கோவில் தலைமை அர்ச்சகர் பட்டு சிவாச்சாரியார் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான பாதுகாப்பு பணியில் பூம்புகார் போலீசார் ஈடுபட்டனர்.