கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா
நெல்லிக்குப்பம் மற்றும் காட்டுமன்னார்கோவில் பகுதி கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ராகு- கேது பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் சிறப்பு யாக பூஜையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் குருக்கள் குமார், ஹரி பிரபோ, முருகானந்தம் ஆகியோர் செய்து இருந்தனர்.
இதேபோல் நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவில், மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் கோவில், திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், வாமனபுரீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சியை யொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
காட்டுமன்னார்கோவில்
இதேபோல் காட்டுமன்னார்கோவில் உடையார்குடி அனந்தீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள ராகு-கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் கலியபெருமாள் செய்து இருந்தார். திருமூலஸ்தானம் திருமூலநாதர் கோவில், மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், லால்பேட்டை காசி விஸ்வநாதர் கோவில், கொல்லிமலைகீழ்பாதி சிவலோகநாதர் கோவில், ஓமாம்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.