மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்; தந்தை- மகன் பலி

சேத்தியாத்தோப்பு அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தந்தை-மகன் பரிதாபமாக இறந்தனர்.;

Update: 2022-03-21 18:40 GMT
சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு மகன் சிவபெருமான் (வயது 27). ஓட்டல் தொழிலாளி. இவரது மகன் வித்தீஷ் (6). சிவபெருமான் வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் தனது மகனை அழைத்து கொண்டு சேத்தியாத்தோப்புக்கு புறப்பட்டார். சிறிது தூரம் சென்றபோது, எதிரே விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சிவபெருமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த வித்தீசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

 அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், வித்தீஷ் ஏற்கனவே இறந்துவிட்டான் என தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தந்தை-மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்