விராலிமலை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
விராலிமலை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விராலிமலை:
தொழிலாளி தற்கொலை
விராலிமலை தாலுகா இராஜகிரியை சேர்ந்தவர் சங்கன் மகன் சரவணன் (வயது 28). தொழிலாளி. இவரது மனைவி பானுமதி (26). இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சரவணனுக்கும் அவரது தந்தைக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக சரவணன் தென்னம்பாடியில் உள்ள அவரது மாமனார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று விராலிமலை சந்தைக்கு பானுமதி சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் சரவணன் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பானுமதி அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சரவணனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.