குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது

கொள்ளிடம் அருகே குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது

Update: 2022-03-21 18:33 GMT
கொள்ளிடம்:
 கொள்ளிடம் அருகே திருக்கருக்காவூர் ஊராட்சி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் குடிசை வீடு நேற்று முன்தினம் மின்கசிவு காரணமாக  தீப்பிடித்து எரிந்தது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து, நிவாரண உதவிகள் வழங்கி அரசின் சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். உடன் ஒன்றிய குழு உறுப்பினர் சுகன்யா பிரேம்குமார், ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் பொன்னிவளவன், கிராம நிர்வாக அலுவலர் பிரதீப், ஊராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்