5-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை
கரூரில் மாவட்டத்தில் 5-வது நாளாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
கரூர்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டம் உள்ளது. சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள பட்டியலில் கரூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.