திருக்கடையூரில் குண்டும், குழியுமான சாலை சீரமைப்பு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திருக்கடையூரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்பட்டது. குண்டும், குழியுமான சாலை
திருக்கடையூர்:
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திருக்கடையூரில் குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்பட்டது.
குண்டும், குழியுமான சாலை
திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு விழா வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.இந்த கோவில் எதிர்புறம் உள்ள சன்னதி சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வந்தனர்.
சீரமைக்கப்பட்டது
மேலும் சாலையில் நடந்து செல்பவர்கள் பெயர்ந்து கிடக்கும் ஜல்லி கற்களால் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். குண்டும், குழியுமான சாலையால் குடமுழுக்கு விழாவுக்கு வரும் பக்தர்கள் அவதிப்படுவார்கள். எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழ் கடந்த 10-ந்தேதி வெளியானது.
இதன் எதிரொலியாக வட்டார வளர்ச்சி ஆணையர் மஞ்சுளா, ஒன்றிய பொறியாளர் சோமசுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கரன், வார்டு உறுப்பினர் செந்தில் ஆகியோர் குண்டும், குழியுமான சாலையை பார்வையிட்டு ஆய்வு சீரமைத்தனர்.
உடன்நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் அந்த பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.