பரமத்திவேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் சமரச தீர்வு முகாம்
பரமத்திவேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் சமரச தீர்வு முகாம் நடந்தது.
பரமத்திவேலூர்:
வேலகவுண்டம்பட்டி, நல்லூர், பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், பரமத்தி ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கான சமரச தீர்வு முகாம் காவல்துறை சார்பில் பரமத்திவேலூரில் நடந்தது. முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் முன்னிலையில், புகார் தெரிவித்தவர்களையும், குற்றம் சாட்டப்பட்டவர்களையும் நேரில் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். முகாமில் அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.