பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

நாகை மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.;

Update: 2022-03-21 18:21 GMT
வாய்மேடு:
நாகை மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. 
தகட்டூர்
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் ராமகோவிந்தன் காடு அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. 
கூட்டத்திற்கு பள்ளியின் தலைமையாசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சுப்பிரமணியன்  வரவேற்றார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக்குமார்  பேசினார்
இதில் பெற்றோர்கள், மாணவ மாணவிகள்மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கீழ்வேளூர்
கீழ்வேளுர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் தலைமையாசிரியர் ரவி தலைமையில் நடந்தது. பேரூராட்சி தலைவர் இந்திரா காந்தி முன்னிலை வகித்தார். இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் முத்துராஜா உதவி தலைமையாசிரியர் தமிழ்செல்வன், பேரூராட்சி உறுப்பினர் ராஜாத்தி, வடகரை ஊராட்சி தலைவர் பாண்டியன், பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆழியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் பள்ளி தலைமையாசிரியர் நீலமேகம் தலைமையில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை முன்னிலை வகித்தார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முகமது யூசுப், ஊராட்சி உறுப்பினர் இஸ்மாயில் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
திட்டச்சேரி
திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் தலைமையாசிரியை கலாராணி தலைமையில் நடந்தது. இதில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முகமது சுல்தான், சுல்தான் ரித்தாவுதீன், செய்யது ரியாசுதீன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் புறாக்கிராமம் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் மாணிக்கவாசகம் தலைமையிலும், திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை நிர்மலாராணி தலைமையிலும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது. 
இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள், சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.அதேபோல் திருமருகல் ஒன்றியத்தில் 6 மேல்நிலைப்பள்ளிகள், 7 உயர்நிலைப்பள்ளிகள், 82 தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்