வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-03-21 18:17 GMT
சிக்கல்:
 கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்வேளூர் வட்ட தலைவர் தெட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.வட்ட செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். அலுவலக உதவியாளர் மற்றும் பதிவுரு எழுத்தர் பதவி உயர்வு தகுதி காலத்தை 4 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் காலிப்பணியிடங்களை  உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன  உள்ளிட்ட 10 அம்ச‌ கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வட்ட பொருளாளர் சசிகலா, மாவட்ட பிரதிநிதி அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்