மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்
மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.;
கிருஷ்ணராயபுரம்,
கரூர் மாவட்ட பாரதிய மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் லாலாபேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக மாட்டு வண்டிகளில் மணல் அல்ல அனுமதி இல்லாததால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர். எனவே இவர்களின் வாழ்வாதாரம் கருதி அடுத்த மாதம் 4-ந்தேதி லாலாபேட்டை காவிரி ஆற்றில் குடியேறும் தொடர் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில், நிர்வாகிகள் சிவா, கருப்பையா, மாடசாமி, ஆறுமுகம், ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.