மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-03-21 18:11 GMT
கரூர்
கரூர், 
விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமை தங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்