உரிய ஆவணங்கள் இல்லாத 42 ஆட்டோக்கள் பறிமுதல்

தேனியில் உரிய ஆவணங்கள் இல்லாத 42 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-03-21 18:01 GMT
தேனி: 

தேனி நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் ஆட்டோ டிரைவர்களின் விதிமீறலும் அதிகரிப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து தேனி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தெட்சிணாமூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுனர் உரிமம், வாகன காப்பீடு, வட்டார போக்குவரத்து அலுவலக அனுமதிச்சான்று போன்ற ஆவணங்கள் இன்றி பலரும் ஆட்டோக்கள் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி இயக்கிய 42 ஆட்டோக்களை நேற்று ஒரே நாளில் போலீசார் பறிமுதல் செய்தனர். 

சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் போக்குவரத்து விதிகள், போக்குவரத்து விதிமீறல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், ஆட்டோ டிரைவர்கள் தங்களின் தவறை உணர்ந்து போலீசாரிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அறிக்கை அளித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்