விஷம் குடித்து பெண் தற்கொலை
குழந்தையின் நகையை அடகு வைத்து கணவர் மது குடித்ததால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி மேல்பாதி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது33). இவருடைய மனைவி பரமேஸ்வரி (27). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். கார்த்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த குழந்தையின் மோதிரத்தை மனைவிக்கு தெரியாமல் எடுத்து அடகு வைத்து, அந்த பணத்தில் வீட்டின் முன்பகுதியில் சிமெண்டு தளம் போட்டுள்ளார். இதற்கு பணம் எப்படி வந்தது என அவரிடம், மனைவி பரமேஸ்வரி கேட்டுள்ளார். அதற்கு கார்த்தி உனக்கு தெரியாமல் குழந்தையின் மோதிரத்தை எடுத்து அடகு வைத்து தளம் போட்டதாகவும், மீதியிருந்த பணத்தில் மதுகுடித்து விட்டதாக கூறியுள்ளார். தனக்கு தெரியாமல் குழந்தையின் மோதிரத்தை எப்படி அடகு வைத்தீர்கள் என கணவரை பரமேஸ்வரி கண்டித்துள்ளார். இதை தொடர்ந்து அவர் வீட்டில் இருந்து பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரமேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தர். இதுகுறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பரமேஸ்வரிக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆவதால் உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.