ஜாகீர்தண்டலம் கசக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது
ஜாகீர்தண்டலம் கசக்கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது.;
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த ஜாகிர்தண்டலம் கிராமத்தில் உள்ள கசக்கால்வாய் நீர்வழி பாதையை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் சென்னை ஐ கோர்ட்டின், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை எவ்வித பாகுபாடும் இன்றி அகற்ற வேண்டும் என்ற தீர்ப்பின் அடிப்படையில், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, பட்டியல் தயாரித்து ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை பொதுப்பணி துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி ஜாகிர்தாண்டலம் கசக்கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நெமிலி தாசில்தார் ரவி, தக்கோலம் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கண்ணன் மேற்பார்வையில், நெமிலி இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் காவல்துறை உதவியுடன் நடந்து வருகிறது.