சினிமா தியேட்டரில் தீப்பிடித்தது

சினிமா தியேட்டரில் தீப்பிடித்தது

Update: 2022-03-21 17:44 GMT
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் மூலனூர் ரோட்டில் கடந்த 35 ஆண்டுகளாக ஒரு  சினிமா தியேட்டர் இயங்கி வருகின்றது. இந்த தியேட்டரில்   நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி அளவில் காட்சி முடிந்த பிறகு பொதுமக்கள் வெளியே சென்றுவிட்டனர். இந்நிலையில் திடீரென தியேட்டருக்குள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை அறிந்த தியேட்டர் ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 
தகவலின்பேரில் வெள்ளகோவில் தீயணைப்பு துறை அலுவலர் தனசேகர் மற்றும் வேலுச்சாமி கொண்ட தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தினால்  இருக்கைகள் மற்றும் மேற்கூரை எரிந்து நாசம் ஆனது. இந்த தீ விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது எவ்வாறு தீப்பிடித்தது என்று தீயணைப்பு துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக உடனே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நடைபெற இருந்த 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்