ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்

மேல்மலையனூர் ஒன்றியத்தில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-03-21 17:32 GMT
மேல்மலையனூர், 

மேல்மலையனூர் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலக மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பந்தம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்புச்செல்வன் வரவேற்றார். இதில் வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயலட்சுமி, வட்டார கல்வி அலுவலர் சிவக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாசங்கர் மற்றும் தி.மு.க, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மேல்மலையனூர் ஒன்றியத்தில் சிமெண்டு சாலை அமைத்தல், உலர்களம் அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல், குடிநீர் குழாய் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு ரூ.1 கோடியே 68 லட்சத்து 66 ஆயிரத்து 200 ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்