தேன்கனிக்கோட்டை அருகே குட்கா விற்ற 2 பேர் சிக்கினர்
தேன்கனிக்கோட்டை அருகே குட்கா விற்ற 2 பேர் சிக்கினர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சிக்கனப்பள்ளி மற்றும் தேன்கனிக்கோட்டை சந்தை வீதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடையில் வைத்து விற்பனை செய்த சிக்கனப்பள்ளியை சேர்ந்த பாலாஜி (வயது 32), தேன்கனிக்கோட்டை சந்தை வீதியை சேர்ந்த சிராஜ் (44) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.