கெலமங்கலத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
கெலமங்கலத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் தெலுங்கு பள்ளியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார குழந்தைகள் நல அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பளர் அண்ணாதுரை வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், ஜாக்கெட் துணி, பழங்கள் உள்ளிட்ட சீர்வரிசை வழங்கப்பட்டன. மேலும் கர்ப்பிணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் தொகுதி மேற்பர்வையாளர் அந்துமேரி மற்றும் ஊட்ட சத்து பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.