பெண்ணை தாக்கி நகை பறித்தவருக்கு 5 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

பெண்ணை தாக்கி நகை பறித்தவருக்கு 5 ஆண்டு சிறை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.;

Update: 2022-03-21 17:29 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நெருப்புக்குட்டை பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 30). இவருக்கு தர்மபுரி மாவட்டம், இண்டூர், தளவாய்அள்ளி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி ஊர் பண்டிக்கைக்காக தேவி நெருப்புக்குட்டைக்கு வந்து தங்கி உள்ளார். அவர் மார்ச் 13-ந்தேதி காலை வீட்டிற்கு அருகிலுள்ள பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அதேபகுதியை சேர்ந்த அம்பிகா (30) என்பவர் தேவியை சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளை பறித்து சென்றார். இதுகுறித்து தேவி அளித்த புகான்பேரில் அம்பிகாவை தேன்கனிக்கோட்டை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்தநிலையில் வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அம்பிகாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதம், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி லதா  தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜரானார்.

மேலும் செய்திகள்