அதியமான்கோட்டையில் காளியம்மன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

அதியமான்கோட்டையில் காளியம்மன் கோவிலில் நடந்த பங்குனி உத்திர தேரோட்டத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-03-21 17:15 GMT
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் உள்ள காளியம்மன்  கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 4-ந்தேதி அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் மற்றும்  சக்திகரகம் அழைத்தலுடன் தொடங்கியது. விழாவையொட்டி கும்ப பூஜை,  அம்மனுக்கு பால் அபிஷேகம், கோபூஜை, விநாயகர் மற்றும் காளியம்மன் சிறிய தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று  தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று பெரிய தேரோட்டமும் 23-ந் தேதி தேர் நிலை அடைதலும் நடைபெறுகிறது. 28-ந் தேதி பந்தகாசி வலம் வருதல் நிகழ்ச்சியும், 30-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் ஊர்வலமும் நடக்கிறது. 

மேலும் செய்திகள்