பரமத்தியில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

பரமத்தியில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2022-03-21 17:14 GMT
பரமத்திவேலூர்:
பரமத்தி பழனியப்பா ஆயில்மில் தெருவை சேர்ந்தவர் விமலா (வயது 75). கணவர் இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். விமலா கடந்த 7-ந் தேதி வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். பரமத்தி-திருச்செங்கோடு சாலையை கடக்க ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி விமலா பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்