மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் ராகு, கேது பூஜை
மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவிலில் ராகு, கேது பூஜை நடந்தது.
மோகனூர்:
மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள அசலதீபேஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக யாக வேள்விகள் மற்றும் ராகு, கேது பகவானுக்கு பால், தேன், இளநீர், தயிர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் கலச அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து ராகு, கேது சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சாமிகளுக்கு பஞ்சதீபம், மகாதீபாராதனை நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.