ராசிபுரத்தில் ரூ.90 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ராசிபுரத்தில் 2,869 மூட்டை பருத்தி ரூ.90 லட்சத்துக்கு ஏலம் போனது.

Update: 2022-03-21 17:13 GMT
ராசிபுரம்:
பருத்தி ஏலம்
ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கிளையில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கப்பட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்தனர். 
சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வந்த வியாபாரிகள் பருத்தியை போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.
ரூ.90 லட்சத்துக்கு விற்பனை
இந்த ஏலத்தில் ஆர்.சி.எச். ரக பருத்தி 2,581 மூட்டைகளும், டி.சி.எச். ரக பருத்தி 206 மூட்டைகளும், கொட்டு ரக பருத்தி 82 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டிருந்தன. 
ஆர்.சி.எச். பருத்தி குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 355-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 219-க்கும், டி.சி.எச். பருத்தி குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 813-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 110-க்கும், கொட்டு பருத்தி குறைந்தபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.3 ஆயிரத்து 800-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 800-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.90 லட்சத்துக்கு பருத்தி விற்பனை நடந்தது.

மேலும் செய்திகள்