பர்கூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

பர்கூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.

Update: 2022-03-21 17:13 GMT
பர்கூர்:
பர்கூர் தாலுகா எலத்தகிரி அருகே ஜோடுகொத்தூரை சேர்ந்தவர் வெங்கட்டமாள் (வயது 72). இவர் கடந்த 2 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி இவர் அந்த பகுதியில் உள்ள 70 அடி ஆழமுள்ள கிணறு பக்கமாக நடந்து சென்றார். அப்போது அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதில் அவர் நீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் மற்றும் பர்கூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றில் இறங்கி வெங்கட்டம்மாளின் உடலை மீட்டு கந்திகுப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்