சிங்காரப்பேட்டை அருகே ஏரியில் வேன் டிரைவர் பிணம் போலீசார் விசாரணை
சிங்காரப்பேட்டை அருகே ஏரியில் வேன் டிரைவர் பிணமாக மிதந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை தாலுகா சிங்காரப்பேட்டை அருகே நாய்க்கனூரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் வெங்கடேசன் (வயது 19). வேன் டிரைவர். கடந்த 18-ந் தேதி வீட்டை விட்டு சென்ற வெங்கடேசன் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் நாய்க்கனூர் அய்யன்குட்டை ஏரியில் பிணமாக மிதந்தார்.
இதையடுத்து அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக வெங்கடேசனின் பெற்றோர், உறவினர்கள் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.