ரெயில் மோதி வாலிபர் சாவு

நாகர்கோவிலில், ரெயில் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.;

Update: 2022-03-21 16:39 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவிலில், ரெயில் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 
வாலிபர்
நாகா்கோவில் கட்டயன்விளை பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தின் அருகே நேற்று காலையில் ஒரு வாலிபரின் பிணம் காயங்களுடன் கிடந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், குமார் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பிணமாக கிடந்தவர் கட்டயன்விளையை சேர்ந்த முருகனின் மகன் அஜித்குமார் (வயது26), தொழிலாளி என்பது தெரியவந்தது. அவர் நேற்று அதிகாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.
ரெயில் மோதி சாவு
இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரெயில் அஜித்குமார் மீது மோதியது. இதில் அவர் சுமார் 50 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. 
இதையடுத்து அஜித்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த அஜித்குமாரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அஜித்குமார் இரட்டை சகோதரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்