கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா செய்த முதியவர்

கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா செய்த முதியவர்

Update: 2022-03-21 16:37 GMT
திருப்பூர்:
மடத்துக்குளம் தாலுகா ஜோத்தம்பட்டி அரியநாச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த அர்ச்சுணன் என்பவர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதாக வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியபடி கலெக்டர் அலுவலகம் முன் தரையில் அமர்ந்து தர்ணா செய்தார். பின்னர் அவர் அளித்த மனுவில், ‘தனக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலத்தில் 122 சென்ட் நிலத்தை திருப்பூரை சேர்ந்த லதா என்பவருக்கு விற்பனை செய்தேன். அப்போது எனது 3 ஏக்கர் நிலத்துக்கான எனது மொத்த பத்திரத்தையும் வாங்கினார்கள். பின்னர் அந்த ஆவணத்தை வங்கியில் வைத்து கடன் பெற்றதால் எனது மூலப்பத்திரத்தை பெற முடியவில்லை. இதன்காரணமாக மீதம் உள்ள இடத்தையும் விற்பனை செய்ய முடியாமல் நான் சிரமப்பட்டு வருகிறேன். சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று கேட்டபோதும் எனது மூலபத்திரம் கிடைக்கவில்லை. எனவே மீதம் உள்ள நிலத்தை எனக்கு அளவீடு செய்து கொடுத்து உதவ வேண்டும்’ என்று கூறியுள்ளார். குடிமங்கலம் ஒன்றியம் பூளவாடி ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் ஊராட்சியில் தார்சாலை அமைத்தல், அங்கன்வாடி, ரேஷன் கடையை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். புதிதாக அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும். எம்.ஜி.ஆர்.நகரில் 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலைத்தொட்டி அமைக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்

மேலும் செய்திகள்