கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-03-21 16:03 GMT
கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கருமத்தம்பட்டி


கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சி தேர்தலில் அதிக இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. இதில் தலைவர் பதவி  கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. 

இந்த நிலையில் நகராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தலில், தி.மு.க. கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் க. மனோகரன் வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து கருமத்தம்பட்டி நகராட்சியின் முதல் கூட்டம் அவரது தலைமையில் நேற்று காலை  நகர்மன்ற அரங்கில் நடைபெற்றது. மொத்தம் 27 கவுன்சிலர்களில் 21 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டம் நடந்து கொண்டு இருந்த நிலையில் கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி மனோகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் நகர் மன்ற தலைவராக அறிவிக்கப்பட்ட பி.பாலசுப்பிரமணியம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், சின்னராஜ், ஆர்.பி முருகேசன், வி.எம் ரங்கசாமி, தீரன் கந்தசாமி, சவுந்தரராஜன், வட்டார தலைவர்கள் கராத்தே ராமசாமி, ராயல் மணி, கவுன்சிலர் பாலாமணி, உள்பட சுமார் 80-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள, காந்தி சிலையின் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள்  கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதை ஏற்றுக்கொண்டு, முதல்-அமைச்சர் அறிவித்தப்படி பதவியை ராஜினாமா செய்து, காங்கிரஸ் கட்சிக்கே தலைவர் பதவியை அளிக்க கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்