வாலிநோக்கம் கிராமத்தில் இருந்து முதல்முறையாக மதுரைக்கு அரசு பஸ்

வாலிநோக்கம் கிராமத்தில் இருந்து முதல்முறையாக மதுரைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது.

Update: 2022-03-21 15:51 GMT
சாயல்குடி, 
சாயல்குடியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாலிநோக்கம் கிராமத்திற்கு ஒப்பிலான், மாரியூர், மேல முந்தல், கீழமுந்தல், ஆகிய பகுதிகளின் வழியாக அந்த பகுதியினர் சென்று வருகின்றனர். இந்த பகுதி மக்கள் மதுரை செல்ல வேண்டுமானால் ராமநாதபுரம் அல்லது பரமக்குடி வழியாக சென்று வந்தனர். அதிக தூரம் அதிக நேரம் செலவிட வேண்டி இருந்தது. இப்பகுதி மக்கள் வாலிநோக்கம் கிராமத்தில் இருந்து சாயல்குடி வழியாக அருப்புக்கோட்டை மதுரைக்கு செல்ல பஸ் இயக்கக்கோரி முதுகுளத்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் அலுவலர்கள் சத்தியே ந்திரன், டோனி சார்லஸ், ரஞ்சித் மணிகண்டன் ஆகியோரிடம் கிராம மக்கள் சார்பாக ஒன்றிய கவுன்சிலர் வசந்தா கதிரேசன் மனு அளித்தார். பொதுமக்களின் கோரிக்கை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்  உடனடியாக கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி  வாலி நோக்கத்தில் இருந்து புதிய வழித்தடத்தில் மதுரைக்கு முதல்முறையாக அரசு பஸ் இயக்கப்பட்டது. புதிய பஸ்சை கீழமுந்தல் கிராமத்தில் சாயல்குடி தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய கவுன்சிலர் வசந்தா கதிரேசன், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் வரவேற்று பஸ்சுக்கு மாலை அணிவித்து குலவை இட்டு வரவேற்றனர். டிரைவர் மற்றும் கண்டக் டருக்கு பொதுமக்கள் சார்பில் சால்வை அணிவிக்கப் பட்டது. கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய  அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்