தேவாலா அருகே மாதேஸ்வரர் கோவில் திருவிழா

தேவாலா அருகே அட்டியில் மாதேஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்களின் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-03-21 15:30 GMT
கூடலூர்

தேவாலா அருகே அட்டியில் மாதேஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்களின் ஊர்வலம் நடைபெற்றது.

மாதேஸ்வரர் கோவில் விழா

கூடலூர் தாலுகா தேவாலா அருகே அட்டியில் மாதேஸ்வரர் கோவில் திருவிழா கடந்த 20-ம் தேதி தொடங்கியது. இதையொட்டி காலை முதல் இரவு வரை சுவாமிக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. இரவு 10 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 

தொடர்ந்து காலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 8 மணிக்கு கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.  தொடர்ந்து பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. 

பகல் 12 மணிக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

விசேஷ பூஜைகள்

பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய நடனம் ஆடினர். செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜைகளும், பகல் 11 மணிக்கு மகா தீபாராதனையும் காண்பிக்கப்படுகிறது. 

தொடர்ந்து இரவு வரை பல்வேறு விசேஷ பூஜைகள் நடக்கிறது. மேலும் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. புதன்கிழமை காலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்