கோவில்பட்டி கோவில்களில் ராகு, கேது பெயர்ச்சி விழா

கோவில்பட்டி கோவில்களில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது;

Update: 2022-03-21 15:06 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று மாலையில் ராகு, கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் மாலை 5 மணிக்கு ராகு, கேது பெயர்ச்சி விழாவை யொட்டி கணபதி பூஜை, சங்கல்பம், ஸ்தபன கும்பகலச பூஜை, யாக சாலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர. ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நவக்கிரகத்திலுள்ள ராகு, கேதுவுக்கு மஞ்சள், பால், தேன் பன்னீர், சந்தனம் முதலான 18 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்