லாரி டிரைவரிடம் செல்போன் பறித்தவர் கைது

எட்டயபுரம் அருகே லாரி டிரைவரிடம் செல்போன் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்;

Update: 2022-03-21 12:46 GMT
தூத்துக்குடி:
எட்டயபுரம் எத்திலப்பன் நாயக்கன்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 38). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் மடத்தூர் ரோட்டில் உள்ள ஒரு லாரி செட் முன்பு கைப்பையுடன் நின்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி சக்திநகரை சேர்ந்த நாகேந்திரன் மகள் வேல்முருகன் (22), தூத்துக்குடி கணேசன் காலனியை சேர்ந்த மகாதேவன் மகன் சுதர்சன் மற்றும் ஒருவர் வந்தனர். அவர்கள் திடீரென கந்தவேல் பையில் வைத்து இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, சுதர்சனை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மற்ற 2 பேரையும் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்