கும்மிடிப்பூண்டி அருகே நிலப்பிரச்சினை மோதலில் 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே நிலப்பிரச்சினை மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-21 12:36 GMT
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டை அடுத்த பண்பாக்கத்தில் குடும்பத்தோடு வசித்து வருபவர் சங்கர் (வயது 49). இவர் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர் அன்பழகனுக்கும் (36) இடையே அடிக்கடி வழி தொடர்பான நிலப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 2 பேரும் ஒருவரையொருவர் உருட்டுகட்டையால் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கவரைப்பேட்டை போலீசார், இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தாசில்தார் அலுவலக உதவியாளர் சங்கர் மற்றும் தனியார் தொழிற்சாலை ஊழியர் அன்பழகன் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்