ஆவடி பஸ் நிலையம் அருகே புதிய ஆவின் பாலகம் திறப்பு

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடி பஸ் நிலையத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆவின் பாலகத்தை பால் வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று திறந்து வைத்தார்.

Update: 2022-03-21 09:40 GMT
பால்பண்ணை மேம்பாட்டு துறை கமிஷனர் பிரகாஷ், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். அதன் பின்னர், ஆவடி பஸ் நிலையம் அருகில் உள்ள நரிக்குறவர் காலனியில் நடைபெற்றுவரும் அடிப்படை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 19 மாற்று திறனாளிகளுக்கு ரூ. 15 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.

மேலும் செய்திகள்