மகனுக்கு பாரமாக இருக்க கூடாது என நினைத்து மூதாட்டி தற்கொலை

மகனுக்கு பாரமாக இருக்க கூடாது என நினைத்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-21 00:39 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே உள்ள வடகால் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 75). இவர் தனது மகனின் ஆதரவில் வாழ்ந்து வந்தார். வயது முதிர்ந்த காலத்திலும் தான், மகனுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்றும், தொந்தரவு செய்யக்கூடாது, என்றும் நினைத்து நேற்று வடகால் அருகே உள்ள ஒரு தனியார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தைக் கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்