மார்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
செம்மண் கடத்திய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே செம்மண் கடத்திய லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
மார்த்தாண்டம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாஸ் தலைமையிலான போலீசார் சிராயன்குழி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், செம்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செம்மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக லாரி டிரைவரான சீர்காழி சட்டநாதபுரம் உச்சிமேடு தெருவை சேர்ந்த அருள் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
---