வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஓலையூர் ஊராட்சி மேலத்தெரு காலனியில் ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மெட்டல் சாலை பணி, ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமான பணியினையும், ராமர் கோவில் அருகில் ரூ.7.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணியினையும், காலனி தெரு, திரவுபதி அம்மன் தெரு, நடுத்தெரு, பெரிய பண்டாரக்கோவில் தெரு ஆகிய இடங்களில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட வீடு கட்டும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், குப்பத்து வரத்து வாரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.