குடும்ப தகராறில் விஷம் குடித்த தம்பதி

குடும்ப தகராறில் தம்பதி விஷம் குடித்தனர்.

Update: 2022-03-20 21:53 GMT
வேப்பந்தட்டை:

விஷம் குடித்தனர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெண்பாவூரை சேர்ந்தவர் குமார்(வயது 45). இவரது மனைவி விஜயா(40). இவர்கள் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று குமார் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது விஜயா, குமாரிடம் ஆடு விற்ற பணத்தில் மது அருந்திவிட்டு வந்தீர்களா? என்று கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த குமார் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்தார். இதனைக்கண்ட விஜயா உடனடியாக தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறி, அதே பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார்.
தீவிர சிகிச்சை
இதையறிந்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக 2 பேரையும் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்