ஈரோட்டில் ஓடும் ரெயிலில் பெண் டாக்டரிடம் சில்மிஷம்; கடை உரிமையாளர் கைது

ஓடும் ரெயிலில் பெண் டாக்டரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-20 21:19 GMT
ஈரோடு
ஓடும் ரெயிலில் பெண் டாக்டரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
சில்மிஷம்
சென்னை வேளச்சேரியை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க பெண் டாக்டர் ஒருவர், அவரது குடும்பத்தினருடன் கேரள மாநிலம் கண்ணனூருக்கு சென்னை - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்று கொண்டு இருந்தார். அந்த ரெயில் சேலத்தை கடந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது பெண் டாக்டர் மற்றும் குடும்பத்தினர் பயணம் செய்த அதே முன்பதிவு பெட்டியில் ஒரு நபரும் இருந்தார். அந்த நபர் பெண் டாக்டரிடம் ஆபாச வார்த்தைகளால் பேசி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்ததும், அந்த பெண் டாக்டர் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு சென்று அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
கைது
விசாரணையில் பெண் டாக்டரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கேரள மாநிலம் கோழிகோடு மாவட்டம் காலதிங்கள் பகுதியை சேர்ந்த கொயமான் என்பவரின் மகன் ரபீக் (வயது 39) என்பதும், அவர் கோழிக்கோட்டில் விளக்கு கடை வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து ரபீக்கை போலீசார் கைது செய்தனர். கைதான ரபீக்கிற்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓடும் ரெயிலில் பெண் டாக்டருக்கு வாலிபர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்