அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா
தஞ்சை அருகே அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா நடந்தது.
நாஞ்சிக்கோட்டை:
தஞ்சை விளார் சாலை பர்மா காலனி அண்ணாநகர் பகுதியில் அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு பூச்சொரிதல், மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழாவில் தஞ்சை பூக்கார தெருவில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.