விளம்பர பதாகை வைத்த 23 பேர் மீது வழக்கு

விளம்பர பதாகை வைத்த 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது;

Update: 2022-03-20 20:25 GMT
திருச்சி
திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதியின்றி விளம்பர பதாகை வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து காந்தி மார்க்கெட், பாலக்கரை, கண்டோன்மெண்ட், உறையூர், தில்லைநகர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்த 23 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்