கஞ்சா விற்ற வாலிபர் கைது

குடவாசலில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-20 20:16 GMT
குடவாசல்:
குடவாசல் குவலங்காட்டு தெருவை சேர்ந்தவர் சாமிதுரை மகன் பரணிதரன் (வயது 30). இவர் தனது வீட்டில் வைத்து கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த பரணிதரனை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரணிதரனை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்