அம்மன் கோவிலில் பொங்கல் விழா

ஆலங்குளம் அருகே அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2022-03-20 20:07 GMT
ஆலங்குளம், 
ஆலங்குளம் அருகே உள்ள சுண்டங்குளம் கிராமத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடைபெற்றது. காலையில் பெண்கள் பொங்கல் வைத்து படைப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால்,தயிர், நெய், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மேலும் செய்திகள்